இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் 200இற்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் எய்ட்ஸ் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் 207 எய்ட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு 165 எய்ட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇