மட்/புதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ் ராஜேந்திரனின் ஏற்பாட்டில் அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவியும் கல்வி செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி.திருமலர்ச் செல்வி மரியநாயகம் , அமைப்பின் மண்முனை வடக்கு சமூக அபிவிருத்தி அதிகாரி இ.செல்லத்தம்பி சுரேஷ், அமைப்பின் மண்முனை வடக்கு விவசாயத்துறை அதிகாரி திரு.பாக்கியம் ஜோச் எட்வேட் ஆகியோரின் ஒருங்கிணைத்த நடவடிக்கையாக (12.06.2024 ) இன்று பாடசாலை வளாகத்தில் பயன் தரும் மரங்களும் நிழல் தரும் மரங்கள் என 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந் நிகழ்வை தனது பிறந்த தினத்தை முன்னிட்டு நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய உலகத்தன்மம் சமூக அமைப்பின் அமைப்பாளர் யோகேஸ்வரநாதன் இதயகீதன். மற்றும் அமைப்பின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் இ.செந்தூரன் , அமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் திட்டமிட்டபடி செயற்பாட்டை நடத்தி முடித்தனர் .
நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கி கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇