தென்னை பயிர்ச்செய்கை சபையினால் வழங்கப்படவுள்ள மானியத் திட்டங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனாதிபதியினால் இவ்வருடம் பிரகடனப்படுத்தப்பட்ட தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ் புது நடுகைத் திட்டம் மற்றும் வீட்டுத் தோட்டத்திட்டம் என்பவற்றினூடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் ஒவ்வொன்றும் 300 ரூபா பெறுமதியான 69,632 தென்னம்பிள்ளைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இதில் புதுநடுகை திட்டத்தின் கீழ் 1/4 acக்கு மேற்பட்டதும் 50 acக்கு உட்பட்டதுமான காணிகளுக்கு 417,792 தென்னம்பிள்ளைகள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டமானது தனியார் காணிகள் (காணியின் உறுதி அல்லது பெமிற்றினது போட்டோ பிரதி அல்லது கிராம சேவையாளரால் உறுதிப்படுத்திய பிரதேச செயலாளரால் சான்றுபடுத்தப்பட்ட ஆவணங்கள் கட்டாயமானது). அரச நிறுவனங்களின் காணிகள், வணக்கஸ்தலங்கள் போன்றவற்றுக்கும் பொருந்தும்.

வீட்டுத் தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் 1-15 வரையிலான தென்னம்பிள்ளைகள் (சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட வகையில்) சமுர்த்தி பயனாளிகள், பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்கள், விளையாட்டுக் கழகங்கள், அறக்கொடை நிலையங்கள், இளைஞர் கழகங்கள், மாத சங்கங்கள் என்பவற்றுக்கு 278,528 தென்னம்பிள்ளைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 1/4 ac தொடக்கம் 50 ac வரையிலான இவ்வருடம் ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதம் வரை புதுநடுகைத் திட்டத்தின் கீழ் தென்னம்பிள்ளைகள் எடுத்த அல்லது எடுக்கவுள்ள பயனாளிகளுக்கு குழாய் நீர்ப்பாசனம் அல்லது தூவல் நீர்ப்பாசனம் அல்லது சொட்டு நீர்ப்பாசனம் செய்திருந்தால் ஏக்கருக்கு 30,000 ரூபா மானியத்தொகை வழங்கப்படவுள்ளது.

பசளை மானியத் திட்டத்தின் கீழ் 1/4 தொடக்கம் 5 ac வரையிலான காய்க்கும் மரங்கள் உள்ள தென்னம்பிள்ளைகளுக்கு AMP பசளையானது அரைமானிய விலையில் ஒரு அந்தர் (50 கிலோ) 4000 ரூபாவுக்கு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கும், தேவையான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கும், தென்னை செய்கையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள கமநல சேவை நிலையங்களில் உள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையோ அல்லது பளை பிரதேசத்தில் உள்ள பிராந்திய காரியாலயத்தின் தொலைபேசி இலக்கமான 021 2284 501 என்ற எண்ணுடன் தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects