பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்ட நாரஹேன்பிட்டி ரயில் நிலையம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்டி ரயில் நிலையம் 06.07.2026 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் ‘சிஹின கமனந்தய’ திட்டத்தின் கீழ், அரச – தனியார் பங்களிப்புடன் இந்த ரயில் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையில், ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகத்தினால் ஒரு நிலையான திட்டமாக இந்த ‘சிஹின கமனந்தய’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

களனிவெளி ரயில் பாதையில் கொட்டா வீதி மற்றும் கிருலப்பனை ஆகிய துணை ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள நாரஹேன்பிட்டி ரயில் நிலையம், நீண்ட காலமாகக் புனரமைக்கப்படாத காரணத்தால் வசதிகளற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல அமைந்துள்ள நாரஹேன்பிட்டி பகுதியில், பெருமளவிலான மக்கள் இந்த ரயில் நிலையத்தின் ஊடாக போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இதேவேளை, ரயில் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு மின்சார ரயில் சேவைக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த நிகழ்வில் தெரிவித்தார்.

இதன் கீழ், கொழும்பு – பாணந்துறை, கொழும்பு – மாக்கும்புர மற்றும் கொழும்பு – ராகம ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு முதல் கட்டமாக மின்சார ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects