வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்காக மேலதிக தொடருந்து மற்றும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாகாணங்களுக்குச் சென்று கொழும்புக்கு திரும்பும் மக்களுக்காக 14.04.2024 அன்று விசேட தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றும் (15.04.2024) நாளையும் (16.04.2024) பதுளை, காலி மற்றும் பெலியத்தை தொடருந்து நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை மேலதிகமாக 8 தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன்,இன்று (15.04.2024) முதல் அலுவலக தொடருந்துகள் வழமைப் போல இடம்பெறும் என தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்துத் திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஹட்டன், மொனராகலை, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு நேர அட்டவணைக்கு மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇