சமூகக்கற்றல் மையங்களை மீண்டும் நிறுவுதல் எனும் செயற்றிட்டத்திற்கமைய மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தின் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களை சுயதொழில் ஊக்குவிக்கின்ற வகையில் பயிற்சி நெறியினை வலயக் கல்விப்பணிப்பாளர் சி.சிறீதரனின் வழிகாட்டலில், முறைசாராக்கல்வி இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வனின் ஒழுங்குபடுத்தலில் 12.11.2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பகட்டமாக தொழில் வழிகாட்டல் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு நடைமுறை பயிற்சி [Cake making & Decorations basic cake workshop] பயிற்சியின் வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் வியாபார மேம்பாட்டு உத்தியோகஸ்தர் என்.கோகுலதாஸ் மற்றும் வளவாளர் சுகதகுதி உற்பத்திகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜயத்ரமி சுவோஜன் ஆகியோர் பயிற்சி நெறியை முன்னெடுத்தனர்.
பயிற்சிநெறியின் இறுதியில் சுயதொழிலினை மேற்கொள்ளுகின்ற வகையில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
One Response
👍