தற்காலிகமாக பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்த அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தீர்மானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் 21.01.2026 அன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பை, இன்று (2201.2026) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

குறித்த பிரச்சினை தொடர்பாக நேற்று இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் நபரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல் தொடர்பில் ஏற்கனவே உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், ஒரு வார காலத்திற்குள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை ஏற்படுத்தித் தருவதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் கருத்தை மேற்கோள்காட்டி, சுகாதார அமைச்சின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தொடர்பிலும் உடனடி விசாரணையை ஆரம்பிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று நள்ளிரவு கூடிய கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் நிறைவேற்று குழு, பணிப்புறக்கணிப்பை 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தவும், உறுதியளிக்கப்பட்ட காலத்தில் இணக்கப்பாடுகள் நிறைவேற்றாப்படாவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவும் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் அனைத்து சேவைகளையும் நோயாளர்கள் வழமை போன்று பெற்றுக்கொள்ள முடியும்.

சுகாதார சேவையில் இவ்வாறான சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குறித்து சங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும், இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நோயாளர் பராமரிப்பு சேவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான அனைத்து பொறுப்பையும், தமது கடமையைச் செய்யத் தவறிய சுகாதார அமைச்சின் அதிகாரிகளே ஏற்க வேண்டும் எனவும் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects