புத்தளம் மார்க்கத்தில் கொச்சிக்கடை மற்றும் நாத்தாண்டிய ஆகிய பகுதிகளுக்கு இடையிலான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குறித்த மார்க்கத்திலுள்ள புகையிரதங்கள் கொழும்பு கோட்டைக்கும் கொச்சிக்கடை புகையிரத நிலையத்திற்கும் இடையிலியே புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அனர்த்த நிலைமை காரணமாக பல புகையிரத பாதைகளுக்கு கடும் சேதங்கள் ஏற்பட்டதுடன், மலையக புகையிரத மார்க்கத்தில் சேதமடைந்த பல இடங்களில் மீண்டும் சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










