சந்தையில் தற்போது தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய் ஒரு கிலோகிராமின் விலை 180 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தலொன்று, தற்போது 550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇