இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவிற்கும் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணத் தூய்மையாக்கல், கையூட்டல் அல்லது ஊழல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பான விசாரணை மற்றும் வழக்குத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் சேத்திய குணசேகரவும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் சுபானி கீர்த்திரட்ணவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇