இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (19.06.2024) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 300 ரூபாய் 21 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 30 சதமாகக் காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 63 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 65 சதமாகக் காணப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇