இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க 23.06.2024 அன்று கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், பீடாதிபதிகள், துறைசார்வல்லுனர்களையும், தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் மற்றும் துறைசார் வல்லுனர்களையும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் நாட்டின் முன்னேற்றத்திற்கு கிழக்கு பல்கலைக்கழகம் எப்படி பங்காற்ற முடியும் என கலந்துரையாடப்பட்டதுடன் முக்கியமாக ஏற்றுமதி சார்ந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் ஏற்றுமதி எப்படி நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பு செய்யும் என ஆலோசிக்கப்பட்டது.
விவசாயம், மீன்பிடி, சிறுதானியம் மற்றும் சுற்றுலா துறைகளை எப்படி முன்னேற்றுவது தொடர்பான யோசனைகள் மற்றும் திட்டங்கள் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் துறைசார்வல்லுனர்களினால் மத்திய வங்கி ஆளுனரிடம் முன்வைக்கப்பட்டது. அத்துடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்படவுள்ள கைத்தொழில் பூங்காவினை எப்படி வினைதிறனாகவும் விளைதிறனாகவும் நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவதற்க்கும் பயன்படுத்துவது குறித்தும் இலங்கையில் நிதி ஸ்த்திரத்தன்மையை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலானது மத்திய வங்கி – திருகோணமலை பிராந்திய அலுவலகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பொருளாதார வல்லுனர்களின் கூட்டமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇