ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 2023ஆம் ஆண்டில் 195 மில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
குறித்த இலாபமானது 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிடைத்த அதிகூடிய இலாபமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினூடாக இந்த இலாபத்தை ஈட்ட முடிந்ததாகவும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன், 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் மூலிகைச் செடிகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டம் கடந்த 02.02.2024 அன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇