அண்மையில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலையடித்தோணா ஶ்ரீமுருகன் வித்தியாலயத்திற்கு இடம்பெயர்ந்த குடும்பங்களிற்கான உலர்உணவுப் பொருட்கள் சிறைச்சாலைகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் 12-01-2024 அன்று வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனைச் சிறைக்கூட உத்தியோகத்தர்களின் நிதிப்பங்களிப்பிலும், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் திரு. N.பிரபாகரனின் தலைமையிலும் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் V.G.பானுக, சிரேஷ்ட ஜெயிலர் J.C. ஹென்றிக், நலன்புரி் உத்தியோகத்தர் L. ஜெயசுதாகரன், பாலையடித்தோணா கிராம உத்தியோகத்தர் திரு. G.கலைராஜ் மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர்.
இதன்போது குறித்த நலன்புரி நிலையத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த முப்பது குடும்பங்களிற்கும் ஒரு குடும்பத்திற்கு தலா 7000/- பெறுமதியான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
புகைப்பட உதவி – குழந்தைவேல் நவநீதன்
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…