ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் குரங்கு காய்ச்சல் என்ற எம்பொக்ஸ் நோய் நிலைமையை பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
குறித்த நோய் பரவல் காரணமாக கொங்கோ குடியரசில் மாத்திரம் 450 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் எம்பொக்ஸ் நோய் நிலைமை மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவியுள்ளது.
இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு வீதமும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எம்பொக்ஸ் நோய் நிலைமை வேகமாகப் பரவுவதற்கான சாத்தியம் நிலவுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு சர்வதேச ரீதியிலான ஒன்றிணைந்த முயற்சிகள் அவசியமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உடலுறவு, தோலுடன் தோல் உரசுதல் மற்றும் சுவாசம் என்பவற்றின் ஊடாக இந்த நோய் பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…