மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்துள்ளார்.
முதற்கட்டமாக 19 பயனாளிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇