ஏனைய வருடங்களை விட இந்த வருடம் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் வரை 64 டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அதனை இரண்டு வலயங்கள் வரை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனவரி மாதத்திற்குள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, குறித்த எண்ணிக்கை 200ஆக குறைந்துள்ளதாகவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில், ஜனவரி முதல் இதுவரை 20,365 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 7,289 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
2024ஆம் ஆண்டில் 8 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇