டித்வா சூறாவளி காரணமாக, மருதானையிலிருந்து பேராதனை வரையிலான பிரதான புகையிரதப் பாதையில் நிலச்சரிவுகள், மண் அரிப்பு, பாறை சரிவுகள், பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் போன்ற 97 சேதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றின் 92 தற்போதும் புகையிரத திணைக்களத்தினால் புனரமைப்பு பணி ஊடாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், றம்புக்கனை – கடுகண்ணாவை இடையே மேலும் 5 இடங்களை வழமைக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செயல்முறையின் சிக்கல்கள் காரணமாக, விசேட பொறியியல் சோதனைகளையும் திட்டங்களையும் தயாரித்து NBRI புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
புனரமைப்புப் பணிகளுக்கான மூலப்பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக, மே 03 முதல் ரம்புக்கனையிலிருந்து கடிகமுவவிற்கு புகையிரத சேவை இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










