மண்ணெண்ணெய் விலையை மாத்திரம் 31.12.2024 அன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் குறைத்துள்ளது.
அதற்மைய , மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 183 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் , ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, ஒக்டென் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 309 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும் தொடர்ந்தும் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை , ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 286 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபாவாகவும் தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதே வேளை , இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக லங்கா IOC மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் தங்களது எரிபொருட்களின் விலையை மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானித்துள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇