நீர் கட்டணங்கள் தொடர்பான மீளாய்வுப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, நீர் கட்டணத்தை அதிகரிப்பதா, குறைப்பதா அல்லது தற்போதைய கட்டண முறையை தொடர்வதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தின் குடிநீர்த் தேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு இந்த ஆண்டு சுமார் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய குழாய்களைப் பதித்தல், பழைய குழாய் அமைப்புகளை சீரமைத்தல் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









