மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு கல்வி கற்று கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சிவானந்தா விவேகானந்தா மாணவ ஒன்றியத்தினால் 2023ஆம் ஆண்டுக்கான, இலவச கண் பரிசோதனை முகாம் சிவானந்தா மற்றும் விவேகானந்தா மாணவ ஒன்றியத்தின் தலைவர் விஷேட கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் சிறிகரநாதன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் 10.11.2023 அன்று இடம்பெற்றது.
கல்லடி பிரதேசத்திற்குட்பட்ட 06 பாடசாலைகளின் தரம் இரண்டு மாணவர்களுக்கான கண் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டத்துடன், கண் பிரச்சினைகள் இனம் காணப்பட்ட மாணவர்களுக்கான மேலதிக சிகிச்சைக்கான பரிந்துரைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் சிவானந்தா மற்றும் விவேகானந்தா பாடசாலைகளின் அதிபர்கள், சிவானந்தா பாடசாலை பழைய மாணவ சங்க தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி மற்றும் சிவானந்தா, விவேகானந்தா மாணவ ஒன்றிய உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇