இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

“நேர்மையான இலங்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் பிரதேச செயலாளர் எஸ்எச்.முஸம்மில் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இச் செயலமர்வில் சமுர்த்தி தலைமைமுகாமையாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செயற்றிட்டத்தின் நோக்கம் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பெரும் பொறுப்பு எமக்கு தேவையான வளங்களை பயன்படுத்திவிட்டு எஞ்சிய வளங்களை எதிர்கால தலைமுறைக்காக பாதுகாத்து வைப்பதாகும் என தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் இந்த நோக்கை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்ற பயிற்சிநெறியில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விளக்கம் மற்றும் சட்ட ஏற்பாடுகள், அவற்றினால் ஏற்படும் பாதக விளைவுகள் என்பன தொடர்பாக வளவாளர்களாக கலந்துகொண்ட பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா அகியோரினால் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், அரச நிறுவனங்களில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சம்பவ கற்கைகள் மூலமும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects