இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணத்திற்கான விளையாட்டு நிகழ்வு இம் முறை இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளர் எச்.பிரியல்சில்வா தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 09.03.2024 அன்று இடம்பெற்றது.
பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் மற்றும் இலங்கை வங்கியின் கீதம் என்பன இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியன.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் , மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உஜித் என்.பி.லியனகே, கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தர் ரீ. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை வங்கியின் உத்தியோகத்தர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் , அவர்களின் விளையாட்டு திறமையினை வெளிக்காட்டுவதற்கும் இவ்விளையாட்டு விழா களமாக அமையப்பெற்றுள்ளது.
இதன் போது உத்தியோகத்தர்களிடையே கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்தாட்டம், குண்டெறிதல், ஈட்டியெறிதல், ஓட்டப் போட்டிகள் என்பன இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் இந்தியாவின் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு இடையிலான பாக்கு நீரிணையை நித்தி கடந்த புனித மிக்கேல் பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், வங்கி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇