மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரனின் நெறிப்படுத்தலில் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை 12.11.2025 அன்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் இதுவரை காலமும் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுகளைப் பெற்றுக்கொள்ளாத சுமார் 50இற்கும் மேற்பட்டோர் பதிவு சான்றிதழ்களை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு வலயத்திற்கான பிரதிப் பதிவாளர் நாயகம் கே.நடராசா கலந்து கொண்டதுடன், கெளரவ அதிதியாக மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் பா.பரசுராமன் கலந்துகொண்டதுடன், இந்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கே.பேரின்பநாயகம், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நடமாடும் சேவையினை பிரதேச செயலகப் பதிவாளர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects