2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந் நிலையில், இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 10 இலட்சத்து 93 ஆயிரத்து 659 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










