போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம் ஒன்றை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் புதிய காத்தான்குடி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தின நிகழ்வு வங்கி முன்றலில் நடைபெற்றது.
வங்கி முகாமையாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மஹ்ஜூத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் வங்கி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், காத்தான்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்மி, சமுதாயம் சார் சீர் திருத்த உத்தியோகத்தர் எம்.எம்.ரஸூல் ஷா ஆகியோர் கலந்துகொண்டதுடன் மெளலவி எம்.எச்.எம்.ஜிப்ரி(மதனி) ஆன்மீக உரை நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் சமுர்த்தி சமுதாய உறுப்பினர்களால் புகைத்தல் மற்றும் போதை பாவனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டதுடன் சமுர்த்தி வங்கி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










