விஜய் ஹசாரே கிண்ண கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் ஆயுஷ் மத்ரே, ஆடவருக்கான ஏ தர கிரிக்கெட்டில் 150க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற இளம் வீரர் என்ற உலக சாதனையை தனதாக்கியுள்ளார்.
31.12.2024 அன்று இடம்பெற்ற நாகலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, அவர் இந்த சாதனையை தனதாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் மத்ரே இசாதனையை 17 வருடங்கள் 168 நாட்களில் பதிவு செய்துள்ளார்.
இப்போட்டியில் அவர் 117 பந்துகளில் 181 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
முன்னதாக யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்த சாதனையை 17 வருடங்கள் 291 நாட்களில் தனதாக்கியிருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய போது அவர் இந்த சாதனையைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇