கல்வி அமைச்சு விடுக்கும் விசேட அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும், 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் , அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதையடுத்து, விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 24 ஆரம்பமாகும் என்பதுடன், மே மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பின்னர், விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஜூன் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து, முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

பின்னர், 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 3 ஆம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும், 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects