பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த (03.08.2025) முதல், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் கருமபீடம் ஊடாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 1,338 சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக,சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு வேரஹெரவில் உள்ள திணைக்களத்தின் அலுவலகத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டியிருந்தது.

இந்த செயல்முறையை எளிதாக்குவதே புதிய பிரத்தியேக கருமபீடத்தின் நோக்கமாகும்.

எவ்வாறாயினும். குறைந்த கட்டணத்தில் (ரூ. 2,000) சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதால், தொழில்முறை உள்ளூர் சுற்றுலா வாகன சாரதிகளின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறி, தேசிய சுற்றுலா வாகன சாரதிகள் சங்கம் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects