கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிய பலத்த காற்று!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 29.05.2025 அன்று இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பு – காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலும், கிரேண்ட்பாஸ் பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்தாக தெரிவிக்கப்படுகிறது

அத்தோடு, கிரேண்ட்பாஸ் புனித ஜோசப் வீதியில் பெரிய அளவிலான மரம் ஒன்று விழுந்ததால், அருகில் இருந்த 6 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், வீடுகளில் வசித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects