தைத்திருநாளை முன்னிட்டு குடும்பிமலையில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிங்கப்பூரில் வசிக்கும் C.யோகராஜா குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில், குடும்பிமலை கிராமத்தில் 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் 14-01-2024 அன்று வழங்கிவைக்கப்பட்டன.

93 நண்பர்கள் எனப்படும் மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயம், புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியவற்றில் 1993 ஆம் ஆண்டு உயர்தரம் கற்றவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பு இவ் வேலைத்திட்டத்தினை ஒருங்கிணைத்திருந்தது.

அரிசி, மா, சீனி, பருப்பு, சோயா, சமபோஷ போன்ற 13 அத்தியவசிய பொருட்களைக் கொண்ட ஒவ்வொன்றும் தலா 5270/- பெறுமதியான 100 பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் திரு.சித்திரவேல் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும், 93 நண்பர்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து இவ் உலர்உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

93 நண்பர்கள் எனும் அமைப்பின் மூலமாக மட்டக்களப்பில் பல்வேறு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதாக இவ்அமைப்பின் பிரதிநிதி இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects