தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம், இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 10 ஏக்கருக்கு மாத்திரமே குறித்த உர மானியம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் அதனை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇