LIFT நிறுவனத்தின் நகர்ப்புறப் பெண்களுக்கான நிலையான வேலைவாய்ப்பு எனும் எண்ணக்கருவில் மற்றுமொரு திட்டம் ஆரையம்பதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் இயங்கிவரும் LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் ஆரையம்பதி செல்வாநகர் பகுதியில் இயங்கிவரும் சுமிதா கைத்தறி நிலையத்திற்கான உபகரணங்கள் 16.10.2024 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
SCOT UK எனும் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இக் கைத்தறி உற்பத்தி நிலையத்திற்கான உபகரணங்கள் LIFT நிறுவனத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் அதில் வேலைசெய்யும் பெண்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகெளரி தினேஷ், LIFT நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் திருமதி. ஜானு முரளிதரன், SCOT நிறுவனத்தின் பிரதிநிதியான திரு நடராஜா ஜெபராஜா, மண்முனைப்பற்றுப் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு. வி.குபேந்திரன் மற்றும் திரு. த.இளங்கீரன், கைத்தறி நிலைய உத்தியோகத்தர்கள், திட்டப் பயனாளிகள், LIFT நிறுவன உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குதல் எனும் எண்ணக்கருவில் LIFT நிறுவனத்தினால் காளான் பண்ணை, அம்மா வீடு குழந்தைகள் பராமரிப்பு நிலையம் என பல வேலைத்திட்டங்களை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வரிசையில் இக் கைத்தறி உற்பத்தி நிலையத்திலும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் LIFT நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇