ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள LPL 6வது சீசன்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6வது அத்தியாயம், எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தொடர் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இத்தொடருக்கான வீரர்கள் வரைவு மார்ச் 22 ஆம் திகதி நடைபெறும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்தது.

எவ்வாறாயினும், இந்த வருடம் இலங்கை மற்றும் இந்தியாவின் இணை ஏற்பாட்டில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்காக மைதானங்களை தயார்படுத்தும் நோக்கில், இத்தொடரை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects