தமிழ்நாடு – தர்மபுரி மாவட்டத்தின் இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள 168 பயளாளிகளுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு தர்மபுரி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 8 கோடியே 40 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான புதிய வீடுகள் சிறுபான்மை, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரால் கையளிக்கப்பட்டுள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கும் 80 பயனாளிகளுக்கும் நல்லம்பள்ளி ஒன்றியத்தின் பூவல்மடுவு இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் 88 பயனாளிகளுக்கும் புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் தமிழகத்தின் மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇