2024ம் வருடத்திற்கான விதாதா வள நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (22.01.2024) அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், மாவட்ட விதாதா உத்தியோகத்தர் இலக்கணகுமார், விதாதா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கைத்தொழில் அமைச்சின் விதாதா பிரிவின் மேலதிக செயலாளர் ஏ.லக்கதாஸ் பங்குபற்றுதலுடன் இக் கலந்துரையாடல் இடம் பெற்றது.
மாவட்டத்தின் பிரதேச விதாதா வள நிலையங்களினால் செயற்படுத்தி வரும் செயல் திட்டங்கள் தொடர்பாக இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
விதாதா நிலையத்தினால் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், பெறுமதி சேர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எற்ற வகையில் உற்பத்தி செய்வதற்கான ஆலோசனை வழங்கள், சிறிய மற்றும் நடுத்தர கடன் வசதிகளை வழங்கி முயற்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டங்கள், விதாதா உத்தியோகத்தர்களுக்கு விஞ்ஞான தொழில் நுட்ப அறிவினை மேம்படுத்தல், வியாபார அனுமதியை பெற்றுக் கொடுத்தல், எற்றுமதி பழப்பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல், தொழில் முயற்ச்சியாளர்களுக்கு புதிய தொழில் நுட்ப அறிவு மற்றும் இயந்திரங்கள் வழங்கள், மாவட்டத்தில் சுய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇