யானைகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
இதன்படி யானைகள் புகையிரதத்துட ன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க கண்காணிப்புக் கேமரா அமைப்புகளைப் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அவை செயல்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










