மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டமானது மாவட்ட அரசாங்க ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சிறுவர் உரிமை அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.மதிராஜின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (29.01.2026) நடைபெற்றது.

இதன்போது மாவட்டத்தின் சிறுவர்களது உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் பிரதேச மட்டத்தில் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், போசாக்கு மற்றும் பாதுகாப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், போதைவஸ்து, வீதியோர யாசகம் மற்றும் வியாபாரம் உட்பட சிறுவர் அச்சுறுத்தல் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.

அத்துடன் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவில் ஆராயப்பட்டு தீர்வு காணப்படாத விடயங்களும், மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவில் முன்வைத்து தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகளும் பரிமாறப்பட்டன.

இந் நிகழ்வின் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், சிறுவர் மகளிர் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள், உளவியல் சமூக அலுவலர் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.முரளிதரன், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects