இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற அங்கிகாரத்தை நயோமி அமரசிங்க பெற்றுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பயிற்சி நெறியை முடித்ததன் பின்னர் அவர் இவ் அங்கிகாரத்தை பெற்றுள்ளார்.
ஊடகவிலாளராக வர ஆசைப்பட்ட அவர், வேலை தேடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடும்பத்தினரின் ஆட்சேபனைகள் மற்றும் பாலினத் தடைகளைத் தாண்டி மஹாபொல துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அகாடமியில் தனது பயிற்சியை நிறைவுசெய்தார்.
இதனையடுத்து கார்னிவல் குரூஸ் லைனில் பணிபுரிந்த அவர், உலகம் முழுவதும் பயணம் செய்ததுடன், பல நடைமுறை அனுபவங்களையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், captain தரநிலைக்கு உயர்வதே தனது இலக்கு என நயோமி தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇