டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் நாளை (13.12.2025) முதல் மூன்று நாள் நடமாடும் மருத்துவமனையை மன்னாரில் தொடங்கவுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரஞ்சித் குமார இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவுவதே இத் திட்டத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பண்ணைகளைக் கண்டறிய மன்னாரில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு எட்டு குழுக்கள் அனுப்பப்படவுள்ளன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்கான சேத விபரங்களை உறுதிப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் பணிகள் மாகாண கால்நடை சுகாதார திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருகோணமலை மாவட்ட பண்ணையாளர்கள் 077 35 30 847 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மருத்துவர் சிபாயா நௌசாட்டை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.

அம்பாறையிலுள்ள பண்ணையாளர்கள், 075 06 38 538 என்ற இலக்கத்தின் ஊடாக எம்.ஜே.நௌசாட் ஜமால்தீனையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 077 36 01 322 என்ற இலகத்தின் ஊடாக எம்.ஏ.ஹாதியையும் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects