கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகமும் சிரேஷ்ட பிரஜைகள் சங்க சம்மேளனமும் இணைந்து நடாத்திய முதியோர் தின விழா வாழைச்சேனை அந் நூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பிரதான மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (10) திகதி இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் “ஆரோக்கியமிகு அகவையினை நோக்கிய உலகளாவிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை நடைமுறைகள் கடந்து நிறைவேற்றுதல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இம் முதியோர் தின விழாவில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.நிலுஜா ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், முதியவர்களின் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன், அதில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதன்போது பிரதேசத்தில் 70 வயதைக் கடந்த சிரேஷ்ட பிரஜைகள் பொன்னாடை அணிவித்தும் அன்பளிப்புக்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா, பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.எம்.றுவைத், கணக்காளர் ஏ.மோகனகுமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.விஸ்வகோகிலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇