நாட்டில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (8) ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் முருங்கைக்காயின் மொத்தவிலை 1980 ரூபாவாக காணப்பட்டது.
மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கறிமிளகாய் 1,200 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,100 ருபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவாக அதிகரித்து வந்த ஒரு கிலோ கரட்டின் விலை நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (8) 650 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇