எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் இன்று (23) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தொழில் பிரச்சினைகளை மீளாய்வு செய்து தீர்வு காண அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇