இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியை கிளாடியா கோல்டின் (Claudia Goldin) தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்த விரிவான ஆராய்ச்சிக்காக அவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், இரசாயனவியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் மக்கள் பயனடையும் வகையில் சிறப்பாக செயற்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் 5 துறைகளுக்காக பரிசில்களை பெறவுள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன. இந்தநிலையில், எஞ்சிய பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை கிளாடியா கோல்டின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇