அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குரிய கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இணையவழி அல்லது பிரதேச செயலாளர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
One Response
0776343424