தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 01.07.2024 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது.
தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி, 12 நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் திகதி பேருந்துக் கட்டணத் திருத்தம் செய்யப்படுகிறது.
இவ்வருட கட்டண திருத்தத்தில் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 30 ரூபாய் கட்டணம் 28 ரூபாய் வரை இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதிவேக வீதிகள் உட்பட அனைத்து பேருந்துகளுக்கான புதிய கட்டணத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பட்டியல் வருமாறு…..
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇