கொழும்பு பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து, ஒரு வழி பாதையாக திறக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் வியாரகலை பகுதியில் நேற்றிரவு மண்மேடு மற்றும் உயர் அழுத்த மின் கம்பம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் அந்த பகுதியூடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு அமைய, குறித்த வீதி போக்குவரத்து ஒரு வழிக்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇