கிழக்கிலங்கை இஸ்லாமிய மாற்றுத் திறனாளிகள் நலன்புரி அமைப்பின் கீழ் இயங்கி வரும் ஸாஹிறா விசேட பாடசாலை மணவர்களின் நாற்பெரும் விழா இன்று (10) காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி. றிஸ்வானா ஜவாஹிர் ஹசைன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீலாதுந்நபி விழா, சர்வதேச சிறுவர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் உளநல தினம் ஆகிய நிகழ்வுகள் ஒன்றினைத்துக் கொண்டாடப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அகியோர் கலந்து கொண்னர்.
இதன்போது ஸாஹிறா விசேட பாடசாலையில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதுடன், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் மாணவர்களுக்களுக்கான சிறுவர் தினப் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹக்கீம், கிழக்கிலங்கை இஸ்லாமிய மாற்றுத் திறனாளிகள் நலன்புரி அமைப்பின் தலைவர். எஸ்.எம்.எம். முஸ்தபா, நலன்புரி அமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், உலமாக்கள், பொதுமக்கள் , மாணவர்களென பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇