ஒரே ஆண்டில் அமெரிக்க வரலாற்றுப் பாதைகளை கடந்து அமெரிக்க பெண் சாதனை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்காவின் நடைபாதைகளான காண்டினென்டல் டிவைட் ட்ரெயில் (CDT) மற்றும் கிரேட் டிவைட் ட்ரெயில் (GDT) ஆகியவற்றை ஒரு நாளில் சராசரியாக 30 மைல்கள் தூரம் வீதம் பயணித்து, கடந்து சாதனை படைத்த முதல் பெண்மணியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா குவோ விளங்குகிறார்.

5,698 கிலோமீட்டர் (3,541 மைல்) நீளமான இந்த இரண்டு நடைபாதைகளின் ஊடான பயணத்தை செப்டம்பர் மாதம் நிறைவு செய்தார் ஜெசிகா குவோ.

மேலும் இந்த இரண்டு நடைபாதைகளின் ஊடான பயணங்களை 2005ஆம் ஆண்டு மூன்று ஆண்கள் மட்டுமே நிறைவு செய்திருந்தனர்.

ஜெசிகா குவோ இந்த நடைபாதை பயணத்தில் மொத்தம் 1,79,450 மீட்டர் உயரம் வரை பயணித்துள்ளார். இது எவரெஸ்ட் மலையை 20 முறை ஏறியதற்கு சமமாகும்.

இவர் சென்ற நடைபாதை பயணத்தை காணொளிகளாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததன் மூலம் 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளார்.

மேலும், இந்த நடைபாதைப் பணத்தின் மூலமாக பெற்றுக்கொண்ட மிக அழகான அனுபவத்தையும் ஜெசிகா குவோ பகிர்ந்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects