களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் குறுகிய நிலப்பரப்பில் காடுகளை உருவாக்கும் செயற்பாடான மியோவாக்கி (Miyawaki )முறையிலான காடு வளர்ப்பு திட்டத்தின் நான்காவது செயற்திட்டமானது 17.10.2023 அன்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் எருவில் கிராம சேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவின் களுவாஞ்சிகுடி வடக்கு 01, களுவாஞ்சிகுடி தெற்கு மற்றும் மாங்காடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் றியாஸ் அஹமட், உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்யகெளரி தரணிதரன், பிரதேச சபை செயலாளர் எஸ்.அறிவழகன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எருவில் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த நிகழ்வின் போது மியோவாக்கி காடுவளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகமானது அலுவலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
5 Responses
நல்ல முயற்சி
Nice
Awesome work. Keep it up
இதுதான் மாற்றத்திற்க்கான மையப்புள்ளி
என்ன காடோ…